Shishyaas Anubhavam

Visits: 31
  •  

    தூது போனவன் ஏற்றம் அருமையோ அருமை.
    கஜேந்திர வரதனின் கருணை குணத்தை வர்ணித்து அற்புதமாக உபன்யாசத்தை சுவாமி துவக்கிவைத்தார். மஹாபாரதத்தில் யார் எதற்கு தூது சென்றார், தூது சென்றவரின் ஏற்றம் என்ன என்பதை ஆழ்வார்களின் பாசுரங்களோடு அற்புதமாக விளக்கினார்.
    “எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் அந்த கண்ணன் என்ன நினைக்கிறானோ அது தான் நடக்கும்” என்று சுவாமி கூறியது மிகவும் அருமை. வாழ்க்கையில் அதை நித்யம் உணர்கிறோம்.
    பக்தியோடு இருப்பவரிடம் கண்ணன் இருப்பான் என்று நன்கு மனதில் பதியும்படி சுவாமி கூறினார். விதுரரின் பக்தியை ஆனந்தமாகக் கேட்டு அனுபவித்தோம். எந்த பலனையும் எதிர்பாராத பக்தி அல்லவா விதுரரின் பக்தி.
    “மடி தடவும் சோறு” விளக்கம் அத்புதம். இலை உதாரணம் மிக அருமை.
    நம் ஸ்வரூபத்தை மீறி நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மை அறியாமல் எம்பெருமானே கதி என்று நிச்சயம் அவன் திருவடிகளில் விழுந்து விடுவோம்.

    ஸ்வாமியின் திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு.

    - Pavithra Venkatesh

  •  

     

     

     

     

    அருமை அருமை மிக அருமை. என்ன ஒரு ஞானம்!
    தெளிவான விளக்கம். அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக அற்புதமான உபன்யாசம். எம்பெருமானே வந்து வாமன அவதார சரித்திரம் கூறியது போல் இருந்தது. உண்மையில் செவியில் தேன் வந்து பாய்ந்தது. ஸ்வாமியின் ஒவ்வொரு வார்த்தையும் தேன் போல் தான் இருந்தது. வாமன அவதாரத்தை ஆழ்வார்கள் அனுபவித்த விதத்தையும் ஆனந்தமாய் கேட்டு மகிழ்ந்தோம். கள்ளன் யார் குள்ளன் யார் என்பதை அறிந்து கொண்டோம்.

    ஸ்வாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு.

    - Pavithra

  •  

     

     

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ:
    தன்யோஸ்மி ஸ்வாமி
    “கோவிந்தம் வரதம் வந்தே” என்ற தலைப்பில் ஸ்வாமி சாதித்த இரு மகான்களின் வைபவத்தை கேட்டு பரம க்ருபைக்கு பாத்திரம் ஆனோம்.அவர்களின் திருவடி தாமரைகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு

    அதி அத்புதம் ஸ்வாமி, எம்பெருமானின் அழகை, ஆழ்வார்களின் அருளிச்செயலை கொண்டு அழகாக தொடங்கி வைத்து, ஸ்வாமி மனதை நெகிழ வைத்தார்.

    பகவத் விஷய காலக்ஷேபத்தில், இதர விஷயங்களை ருசி வாசனையோடு நீக்கி ஸமஸ்த கல்யாண குணங்களை உடையவனாகவும், நாம் அவனை தலையால் வணங்கி கைகளை கூப்பினாலே அதை பக்தியாக கருதும் எம்பெருமானையே பற்ற வேண்டும் என்றும் , அவன் உரைத்த பகவத் கீதையை கொண்டு பகவானிடம் பக்தியை பண்ண வேண்டும் என்றும் அதி விவரமாக பல அர்த்த விஷயங்களை அனுதினமும் எடுத்து உரைக்கும் நம் ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு

    - Padma

  • Srimathe Ramanujaya Namah:

    In 1-3-1, Sriram Swami Clearly Explained What Kind Of Bhakthi Is Referenced In ‘paththudai Adiyavarkku Eliyavan…’

    This Pathu(Bhakthi) Is Not ‘para Bhakthi’ Or ‘parama Bhakthi’ But Its Actually ‘bhakthi Upakrama’. This Is The Initial Stage Of Bhakthi For An Individual Having:
    – Adhvesham (Not Hating Bhagawan) And
    – Aprathitheshanam (Allowing Bhagawan To Shower His Krupai & Bless)

    This Is Shown As Follow-
    1. Guna Prakarana Of Bhagwan Having Soulabhyam
    2. Highlighting Emberuman’s Soulabhyam Guna (Not Parathwam)
    3. Emberuman Being A ‘purnan’ Does Not Expect Para Bhakthi Or Parama Bhakthi To Show His Soulabhya Guna Towards His Adiyars. He Accepts Us Even If We Have A Very Small Trace Of Initial Bakthi (Upakrama Dashai)
    4. Sri Rama Mentions He ‘accepts And Bless’ Anyone Who Approaches Him As A Friend ‘mithra Bhavena’. An Individual Just Have To Show Love & Desire Towards Bhagawan Which Signify ‘bhakthi Upakrama’ Stage
    5. Asha Lesha (A Trace Of Desire) Is What Emberuman Expects Which Shows His Soulabhyam Guna
    6. Alwar Mentioned In 2-07-06 ‘ethir Suzal Pukku’ How Emberuman Did Krupai In This Janma And Not In Previous Births.

    Alwar Implies That Both Adhvesham & Aprathitheshanam Qualities Were Also Blessed By Emberuman!

    Its Indeed Our Bhagyam To Listen To This Eeedu Kalakshepam – Sriram Swami Thiruvadikku Pallandu Pallandu 

    Adiyen Ramanuja Dasan,

    - Maadhavan Madan

  •  

     

     

     

     

    Such A Wonderful Explanation And Highlighting The Bhakti Of Guha Perumal. And Chakaravarthi Thirumagan Saying That Illayalvar Is His Brother Through Guha Perumal’s Sammandham .. No Words To Describe.

    - Maadhavan MadanAdiyen Dasan Swami.

  •  

     

     

     

     

     

    1.3.1 & 1.3.2 அதி அற்புதம் ஸ்வாமி 

    Comprehensively explained , great experience . There are so many in depth details . Swamy thiruvadigaluku Pallandu Pallandu

    - Periya Perumal

  •  

     

     

     

     

    Adiyen was delighted and enjoyed Swamy’s upanyasam in Kannada. Looks like Swamy lived in Karnataka for a while. Very happy to hear in Kannada after a long time
    Adiyen

    - Narasimhan

  • அடியேன் தன்யோஸ்மி ஸ்வாமி

    ” துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத்துயக்கும்,
    மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்,
    புயக்கருநிறத்தனன் பெருநிலம்கடந்த நல்லடிபோது, அயர்ப்பிலன்,
    அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.”

    கலங்கமற்ற நெஞ்சில் பிறந்த நல்ல தெளிந்த ஞானத்தை உடையவராக இருக்கிறார்கள் தேவதைகள் (அமரர்கள்).

    அப்படி பட்ட விண்ணுலக தேவர்களையும் கலங்க செய்கிறது, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் மாயச் செயல்கள்.

    எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின்,
    திருஅவதாரங்களை மேற்கொள்கின்ற திருக்கல்யாண குணங்கள், என்னும் மாயச் செயல்கள் ஆகாயத்தை காட்டிலும் மிகவும் பெரியதாகும்.

    புயலையும் உண்டாக்குகின்ற கருத்த நீலநிற மேகத்தை போல திருமேனியை உடைய எம்பெருமானின், உலகளந்த திருவடித் தாமரைகளை,
    நாவினால் பாடி, மனத்தினால் சிந்தித்து,
    அவனை தழுவியவாறு ஆலிங்கனம் செய்து, வேறு எந்த பலன்களையும் எதிர்பார்காமல் தலையாலே வணங்குவேன், என்று சாதித்து இன்றைய காலஷேபத்தை தலைக்கட்டினார் ஸ்வாமி.

    ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு.

    அடியேன் இராமானுஜ தாசி.

    - Rukmani

  •  

     

     

     

     

    Such a wonderful explanation and highlighting the Bhakti of Guha perumal. And Chakaravarthi Thirumagan saying that Illayalvar is his brother through Guha Perumal’s Sammandham .. no words to describe. 🙏Adiyen Dasan Swami.

    - Raghav